FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மைசூர் தசராவில் சர்ச்சை! 3 தலித் அமைச்சர்களை பூஜை செய்யவிடாமல் தடுத்த மூத்த காவல் அதிகாரி!

சைசூர் தசரா விழாவில் தலித் அமைச்சர்களை காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் பூஜை செய்யவிடாமல் தடுத்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது...

கர்நாடக தலித் அமைச்சர்களை பூஜையில் பங்கேற்கவிடாமல் காவல்துறை அதிகாரி தடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது... - Video crop | x
பகிர்:

கர்நாடகத்தின் மைசூரில் நடைபெற்ற தசரா விழாவில், தலித் அமைச்சர்கள் 3 பேரை காவல் துறை கண்காணிப்பாளர் சி.பி. ரிஷியாந்த் பூஜை செய்யவிடாமல் தடுத்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தசரா பண்டிகையை முன்னிட்டு, கர்நாடக கலாசார அமைச்சர் சிவராஜ் டங்கட்கி, வேளாண் அமைச்சர் பி.எம். நரேந்திர சுவாமி, அறநிலையத் துறை அமைச்சர் கே.எஸ். பசவந்தப்பா ஆகியோர் மைசூர் மாளிகை வளாகத்தில் உள்ள கோட்டே ஆஞ்சநேய சுவாமி கோயில் அருகில் கடந்த புதன்கிழமை (அக். 21) நடைபெற்ற நந்தி த்வஜ பூஜையில் பங்கேற்கச் சென்றனர்.

அப்போது, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பின்னால் சென்ற அமைச்சர்கள் 3 பேரையும் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சி.பி. ரிஷியாந்த் வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளார். இதையடுத்து, அமைச்சர்கள் 3 பேரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

பின்னர், முதல்வர் சிவகுமார் தலையிட்டு 3 அமைச்சர்களையும் உள்ளே அனுமதிக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் பூஜையில் பங்கேற்றனர். இந்தச் சம்பவம், பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், அதற்கு ஏராளமான தலித் மற்றும் முற்போக்கு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை சமர்பிக்கும்படி தலைமைச் செயலாளருக்கு முதல்வர் சிவகுமார் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நெறிமுறைகளின்படி, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூஜையில் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படும் நிலையில், முதல்வர் சிவகுமார் உடன் சென்ற அமைச்சர் யத்தீந்திரா சித்தராமையாவை மட்டும் காவல் துறை அதிகாரி ரிஷியாந்த் அனுமதித்துள்ளார்.

இத்துடன், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தன்வீர் சேட் என்பவரையும் எஸ்.பி. ரிஷியாந்த் பூஜை வளாகத்தில் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர், முதல்வர் சிவகுமார் தலையிட்டு அவரையும் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

summary

During the Dussehra celebrations held in Mysore, Superintendent of Police Rishiyanth has created a controversy by preventing three Dalit ministers from performing puja.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments