FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு!

ஆகஸ்ட் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ. 1.99 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.8% அதிகம்.

25 வினாடிகள் முன்பு
ஜிஎஸ்டி - கோப்புப் படம்
பகிர்:

ஆகஸ்ட் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ. 1.99 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.8% அதிகமாகும்.

எனினும் கடந்த மாத ஜிஎஸ்டி வருவாய் உடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும். கடந்த ஜூலையில் 2.11 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டிருந்தது.

மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மொத்த வரி வசூலில் உள்நாட்டு வருவாய் பங்களிப்பு 1.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் 9.3% சரிவாகும். மொத்த இறக்குமதி வருவாய் 29% அதிகரித்து ரூ. 62,604 கோடியாக உள்ளது.

Advertisement

Advertisement

மத்திய ஜிஎஸ்டி வருவாய் ரூ. 38,413 கோடி, மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ. 46,316 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.15 லட்சம் கோடியாக உள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் ரூ. 17,789 கோடி, இதற்கு அடுத்தபடியாக ரூ. 8,608 கோடி. குஜராத் ரூ. 8,312, உத்தரப் பிரதேசம் ரூ. 7,973 கோடி, தமிழ்நாடு ரூ. 7,288 கோடி, ஹரியாணா ரூ. 4,982 கோடி, தெலங்கானா ரூ. 4,448 கோடி, மேற்கு வங்கம் ரூ. 3,975 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக லட்சத்தீவில் ரூ. 10 கோடி, அந்தமான் நிக்கோபர் தீவுகள் ரூ. 53 கோடி, மணிப்பூர் ரூ. 56 கோடி, மிசோரம் ரூ. 78 கோடி, சிக்கிம் ரூ. 81 கோடி, லடாக்கில் ரூ. 85 கோடி வசூலானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

summary

GST collection rose by nearly 15% to Rs 1.99 lakh crore in August finance ministry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments