ஓய்வெடுக்கவோ திருமணங்கள் நடத்தவோ வெளிநாடுகள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: பிரதமர் மோடி
சுதேசி கொள்கையை வலியுறுத்தி பிரதமர் மோடி பேசியது குறித்து...
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக உயர்ந்ததாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் குறிப்பிட்டு, நாட்டு மக்களுக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "7.8 சதவிகித வளர்ச்சிக்காக அனைவரும் என்னுடைய வாழ்த்துகள். நாட்டு மக்களின் உறுதிப்பாட்டுக்காகவும், அவர்களின் கடின உழைப்புக்காகவும் அவர்களுக்கு பாராட்டுகள். இந்த வளர்ச்சியானது, நமது கூட்டாண்மையைக் காட்டுகிறது.
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் விநியோக சங்கிலிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 2020-ல் கரோனா தொற்றுக் காலத்திலிருந்து உலகின் அனைத்து இடங்களிலும் நிலைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இருப்பினும், இந்தியா தன் பாதையில் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறது. இந்த வேகத்தை நாம் தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும். நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும்.
Advertisement
Advertisement
அதே நேரம், சுதேசி கொள்கையும் நாம் ஏற்க வேண்டும். ஓய்வெடுப்பதற்கோ திருமணங்களை நடத்துவதற்காகவோ வெளிநாடுகள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். திருமணங்கள் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும். தேவைகள் இல்லாதபட்சத்தில், தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
சுதேசி மற்றும் தன்னம்பிக்கையை நாம் எவ்வளவு வலியுறுத்துகிறோமோ, அந்தளவுக்கு வளர்ந்த இந்தியாவை சுதந்திரமடைந்த 100-வது ஆண்டில் இளைஞர்களிடம் நாம் ஒப்படைக்க முடியும்.
140 கோடி மக்களின் ஒருங்கிணைந்த வலிமை, நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
PM Modi hails 7.8% GDP growth
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.