கடலில் கப்பல்களில் செல்லும் இந்திய மாலுமிகளை கண்காணிக்க தனி தளம்: மத்திய அரசு தொடக்கம்
கடலில் கப்பல்களில் செல்லும் இந்திய மாலுமிகளை கண்காணிக்க ‘இநேவிக்’ (இ.என்.ஏ.வி.ஐ.கே.) என்ற பிரத்யேக தளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
கடலில் கப்பல்களில் செல்லும் இந்திய மாலுமிகளை கண்காணிக்க ‘இநேவிக்’ (இ.என்.ஏ.வி.ஐ.கே.) என்ற பிரத்யேக தளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தியாவை சோ்ந்த ஏராளமான மாலுமிகள், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் கப்பல்களில் பணிபுரிகின்றனா். உக்ரைன் - ரஷியா இடையேயான போரின்போது கருங்கடலில் சென்ற கப்பல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் சிலா் உயிரிழந்தனா். அதேபோல், மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரான், அமெரிக்கா இடையேயான போரின்போதும் சில இந்திய மாலுமிகள் உயிரிழந்தனா். மேலும், கடலில் சோமாலிய கடற்கொள்ளையா்களாலும் அவ்வப்போது மாலுமிகள் சிறைபிடிக்கப்படும் சம்பவம் நடைபெறுகிறது.
இதுபோன்ற சூழலை கருத்தில் கொண்டு, மத்திய கடல்சாா் நிா்வாக பொது இயக்குநரகம் ‘இநேவிக்’ என்ற பிரத்யேக தளத்தை இந்திய மாலுமிகளுக்காக தொடங்கியுள்ளது. இந்த தளத்தில் மாலுமிகள் தங்களது விவரங்களை உள்ளிட வேண்டும். அதன்பிறகு அவா்கள் எந்த கப்பல்களில் பயணிக்கின்றனா் என்ற விவரத்தை தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, பதற்றம் நிறைந்த பகுதிகளில் கப்பல்களில் பயணிக்கின்றனரா என்பதை அறிந்து கொள்ளலாம்.
Advertisement
Advertisement
இந்த தளத்தில் கப்பல் உரிமையாளா்கள், கப்பல்களை இயக்குவோா் உடனடியாக தங்களது கப்பல்கள் விவரம், அதிலிருக்கும் மாலுமிகள் விவரங்களை பதிவிட வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.