FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேலை இல்லை, உதவுங்கள்! சின்ன திரை வாய்ப்பை மீண்டும் பெற்றது பற்றி ஸ்மிருதி இராணி பேச்சு!!

வேலை இல்லை, வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டு சின்ன திரை வாய்ப்பை மீண்டும் பெற்றதாக ஸ்மிருதி இராணி கூறினார்.

5 செப்டம்பர் 2026, 1:57 pm IST
ஸ்மிருதி இராணி
பகிர்:

2024 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தனக்கு வேலை இல்லை, உதவுங்கள் என்று கேட்டு மீண்டும் சின்ன திரை வாய்ப்பைப் பெற்றது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி 2025ஆம் ஆண்டு முதல் மீண்டும் சின்ன திரை நாடகங்களில் நடித்து வருகிறார்.

ஸ்மிருதி இராணி, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை சின்ன திரையில் ஒளிப்பரப்பான க்யூன்கி சாஸ் பி கபி பஹு தி எனும் தொடரில் துளசி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது இந்த கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. சில திரைப்படங்களிலும் அவர் நடித்துப் பிரபலமடைந்தார்.

Advertisement

Advertisement

கடந்த 2003-ம் ஆண்டு பாஜக-வில் இணைந்த அவர், 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார். ஆனால், 2024ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு, மீண்டும் சின்ன திரைக்குள் நுழைந்தார். அப்போது அது குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டது.

க்யூன்கி சாஸ் பி கபி பஹு தி நாடகத்தின் 2-ம் பாகத்தின் மூலம் நடிகை ஸ்மிருதி இரானி மீண்டும் சின்ன திரை நாடகங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய முடிவு குறித்து முதல் முறையாக ஸ்மிருதி இராணி தற்போது மௌனம் கலைத்துள்ளார். தான் எடுத்த முடிவு அவ்வளவு எளிதானது இல்லை. பாஜக தலைவர்கள் பலரையும் சந்தித்து பேசி புரிய வைத்தேன். சின்ன திரையில் உள்ளவர்களிடமும் பேச வேண்டியது இருந்தது.

அதில் தர்மசங்கடமான விஷயம் என்னவென்றால், வேலை வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட நபர்களை நானே அழைத்துப் பேசினேன். என்னுடைய போனை எடுத்து, சின்ன திரையில் இருப்பவர்களை அழைத்து எனக்கு வேலை இல்லை. ஏதேனும் வேலை கொடுக்க முடியுமா என்று கேட்டேன்.

சில முக்கிய பிரமுகர்களுக்கும் தொலைபேசி வாயிலாகப் பேசி வேலை கேட்டபோது, அவர்கள் உண்மையாகவா? நீங்கள் மத்திய அமைச்சராக இருந்தவர் அல்லவா? இப்போது வேலை கேட்கிறீர்களே என்றனர். அவர்களிடம், மீண்டும் நான் சின்ன திரைக்குள் வருவதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கிறேன் என்று அவர்களை சமாதானம் செய்தேன் என்கிறார்.

படப்பிடிப்புக்கு வந்தால் 12 மணி நேரம்கூட படப்பிடிப்பு நடக்கும், உங்களுக்கு சரியாக வருமா என்று கேட்டார்கள், நான் அனைத்துக்கும் ஒப்புக் கொண்ட பிறகும், படப்பிடிப்பு தளத்தில் பலரும் சங்கடமாக உணர்ந்தார்கள். சம்பளம் பற்றி பேசத் தயங்கினார்கள் என்று கூறியுள்ளார்.

summary

"No work, please help!" — Smriti Irani speaks about regaining opportunities in television.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments