மேற்கு வங்க எல்லையில் ரூ. 17 கோடிக்கும் அதிகமான கடத்தல் தங்கக் கட்டிகளுடன் வங்கதேச நபர் கைது!
மேற்கு வங்க எல்லையில் ரூ. 17 கோடிக்கும் அதிகமான கடத்தல் தங்கக் கட்டிகளுடன் வங்கதேச நபர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
மேற்கு வங்க எல்லையில் ரூ. 17 கோடிக்கும் அதிகமான தங்கக் கட்டிகளுடன் வங்கதேச நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள இந்தியா-வங்கதேச எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுமார் ரூ. 17.40 கோடி கடத்தல் தங்கக் கட்டிகளுடன் வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை மாலை நதியா மாவட்டத்தில் உள்ள ஹல்தர்பாரா சோதனைச் சாவடி அருகே நடைபெற்றது.
Advertisement
Advertisement
கைதான நபரிடமிருந்து மொத்தம் 89 தங்கக் கட்டிகள் (11.28 கிலோவுக்கும் அதிகம்) பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மதிப்பு ரூ. 17.40 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைக்காக அந்த நபரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளிடம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்ததாக அவர்கள் கூறினர்.
எல்லைத் தாண்டிய குற்றங்களைத் தடுப்பதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆகஸ்ட் 2023 முதல் இதுவரை ரூ. 100 கோடி மதிப்பிலான 120 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
A Border Security Force (BSF) patrol team deployed along the India-Bangladesh border in West Bengal has apprehended a Bangladeshi national with smuggled gold biscuits estimated to be worth Rs 17.40 crore, officials said on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.