FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளம்: விமான நிலையங்களில் ஒரே வாரத்தில் ரூ. 11 கோடிக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்!

கேரள விமான நிலையங்களில் ஒரே வாரத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 2:25 pm IST
கொச்சி விமான நிலையம்.
பகிர்:

கேரள விமான நிலையங்களில் ஒரே வாரத்தில் ரூ. 11 கோடிக்கும் அதிகமான 8 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து சுங்கத் துறை ஆணையர் டி. டிஜு வெளியிட்ட அறிக்கையில், இக்காலகட்டத்தில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 தமிழர்கள் மற்றும் 3 கேரளர்கள் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மற்றும் கேரள காவல் துறையுடன் இணைந்து இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பே பல கடத்தல் முயற்சிகளை வெற்றிகரமாகக் கண்டறிய உதவின. சர்வதேச தங்கக் கடத்தல் கும்பல்கள் மிகவும் நுட்பமான வகையில் மறைத்து வைக்கும் முறைகளைப் பயன்படுத்துவதைச் சமீபத்திய பறிமுதல் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

Advertisement

Advertisement

மேலும், விலைமதிப்பற்ற உலோகங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதிலும், நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதிலும் சுங்கத் துறை உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள அமைப்புகள் மற்றும் நிதியளிப்பவர்களைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

summary

Customs has seized eight kg of smuggled gold worth more than Rs 11 crore at airports across Kerala over the past one week, officials said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments