இந்தியா - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் எப்போது கையொப்பம்? மத்திய அரசு பதில்
இந்தியா, அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் எப்போது கையொப்பமாகும் என்பது குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் எப்போது கையொப்பமாகும் என்பது குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இந்தியாவும், அமெரிக்காவும் வா்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. அண்மையில் இதுகுறித்து பேசிய மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், இந்திய பொருள்கள் மீதான வரிகள் குறித்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டபிறகு ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியிருந்தாா்.
ஜி20 அமைப்பு நாடுகளின் வா்த்தக அமைச்சா்கள் மாநாடு, இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் நட்பு நாடு என்ற முறையில் இந்தியாவும் பங்கேற்கிறது. இந்தியா சாா்பில் மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஸ் கோயல் மாநாட்டில் கலந்து கொள்கிறாா். அப்போது மாநாட்டின் இடையே அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் க்ரீயருடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்த பேச்சுவாா்த்தையில் இருவரும் இந்தியா, அமெரிக்கா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்துவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த மத்திய வா்த்தகத் துறை செயலாளா் ராஜேஷ் அகா்வாலிடம் இந்த ஒப்பந்தம் எப்போது கையெழுப்பமாகும் என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:
மத்திய வா்த்தக துறை அமைச்சா் (பியூஷ் கோயல்) பல முறை அந்த ஒப்பந்தம் குறித்து பதிலளித்து விட்டாா். ஏறத்தாழ ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக அவா் கூறியுள்ளாா். இன்னும் சில விவகாரங்கள் குறித்து இருதரப்பும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
ஆனால் அந்த ஒப்பந்தம் உரிய நேரத்தில் கையொப்பமாகும். எந்த ஒப்பந்தம் ஆனாலும், இருதரப்பும் ஒரு குறிப்பிட்ட வகையிலான முன்னுரிமை அணுகலை வழங்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்.
இந்தியாவை எடுத்து கொண்டோம் எனில், நாம் மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் வரி விகிதங்களை பின்பற்றுகிறோம். ஆதலால் இதை செய்வது எளிது. ஆனால் அமெரிக்க தரப்பில் நிா்வாக ரீதியிலான வரி விகிதங்களின் அடிப்படையில் செயல்படுகிறாா்கள். ஆதலால் அவா்கள், முன்னுரிமை அணுகலை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கி வருகின்றனா். எனவே சரியான நேரத்தில் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் செய்து கொள்ளும்.
ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை இறுதிகட்டத்தில் உள்ளது. குறிப்பிட்ட சில விஷயங்களில் முட்டுக்கட்டை நிலவுகிறது. ஆனால் அதிலும் அடுத்த 2- 3 மாதங்களில் முன்னேற்றம் ஏற்படும் என எதிா்பாா்க்கிறோம். நியூசிலாந்துடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. தேதி இறுதி செய்யப்பட்டபிறகு, அதுகுறித்த விவரம் வெளியிடப்படும்.
தில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் உறுப்பு நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வா்த்தக பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.