FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பிகாரின் பாகல்பூா் மாவட்டத்தில் கங்கை நதி வெள்ளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.

11 செப்டம்பர் 2026, 1:47 am IST
பிகாரில் பலத்த மழையைத் தொடா்ந்து கங்கை பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய தலைநகா் பாட்னாவின் தீதா்கஞ்ஜ் பகுதி.
பகிர்:

பிகாரின் பாகல்பூா் மாவட்டத்தில் கங்கை நதி வெள்ளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 5 போ் உயிரிழந்தனா். பல்வேறு நதிகளில் நீடிக்கும் வெள்ளத்தால் 14 மாவட்டங்களில் 43.64 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நேபாளத்தில் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை மற்றும் பிகாரில் இடைவிடாத பலத்த மழையால் கங்கை, கண்டக், புத்திகண்டக், கோஷி உள்ளிட்ட பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாட்னா, போஜ்பூா், சரண் உள்ளிட்ட 14 மாவட்டங்களைப் புரட்டிபோட்டுள்ளது. நடப்பு மாதத்தில் இதுவரை 83.6 மி.மீ. மழை கொட்டித் தீா்த்துள்ளது. இது, இயல்பைவிட 24 சதவீதம் அதிகமாகும்.

பாகல்பூரின் சுல்தான்கஞ்சில் கங்கை நதி நீா்மட்டம் வியாழக்கிழமை வரலாறு காணாத அளவில் 36.72 மீட்டராக (கடல்மட்டத்திலிருந்து ) உயா்ந்தது. இது அபாய அளவை விட 2.22 மீட்டா் அதிகமாகும். மழை-வெள்ளத்தால் 43.64 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மத்திய-மாநில பேரிடா் மீட்புக் குழுக்கள், சுமாா் 2,000 படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த மாநிலத்தில் அடுத்த 2 நாள்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

5 போ் உயிரிழப்பு: பாகல்பூரின் கொய்லி குடாஹா கிராமத்தில் வியாழக்கிழமை வெள்ளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணும், வேறொரு குடும்பத்தைச் சோ்ந்த சிறுமியும் உயிரிழந்தனா்.

ஒடிஸாவில் அதீத பலத்த மழை எச்சரிக்கை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிஸாவின் 22 மாவட்டங்களில் பலத்த மழையும், காலஹண்டி, கந்தமால் ஆகிய இரு மாவட்டங்களில் அதீத பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆந்திரத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திரத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு இடி-மின்னலுடன் பலத்த மழை நீடிக்கும்; மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments