ம.பி. கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு! 16 பேர் கைது!
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு...
மத்தியப் பிரதேசத்தில், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில், விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட ஏராளமான கிராமவாசிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள இந்தச் சம்பவத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் இன்று (செப். 10) உயிரிழந்துள்ளார். இதன்மூலம், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட 32 பேர் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பாதிக்கப்பட்டவர்கள் சாகர் கோல்ட் எனும் மதுபானம் பெயரில் போலியாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், குற்றம்சுமத்தப்பட்ட நபர்களுக்குச் சொந்தமான சட்டவிரோத கட்டமைப்புகளை அதிகாரிகள் இடித்ததாகவும், தலைமறைவாகவுள்ள நபர்களைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
It has been reported that the death toll from consuming illicit liquor in Madhya Pradesh has risen to 16.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.