பிரிக்ஸ் உச்சி மாநாடு: மலேசிய பிரதமர் இந்தியா வருகை! கேரளத்தில் சுற்றுப்பயணம்!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியா வருகிறார்...
18 ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியாவுக்கு வருகை தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு இந்திய அரசின் தலைமையில் தலைநகர் தில்லியில் வரும் செப். 12 மற்றும் செப். 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஏராளமான உலகத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று (செப். 11) தலைநகர் தில்லிக்கு வந்தடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் மலேசிய பிரதமர் இப்ராஹிம் இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இத்துடன், மலேசிய பிரதமர் இப்ராஹிம் மாநாட்டில் பங்கேற்கும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் மற்றும் எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது ஆகியோர் உடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கேரளத்துக்குச் சுற்றுப்பயணமாகச் செல்லும் மலேசிய பிரதமர் இப்ராஹிம் அங்கு இந்தியாவின் கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியாரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், ஈரானிய அதிபர் பெஷேஷ்கியன் ஆகியோர் இந்தியா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
It has been announced that Malaysian Prime Minister Anwar Ibrahim will visit India to participate in the 18th BRICS summit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.