FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தில்லி கட்டட விபத்து: சுபம் தியாகியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

தில்லி விடுதி கட்டட விபத்தில் முன்ஜாமீன் நிராகரித்தது பற்றி..

11 செப்டம்பர் 2026, 3:19 pm IST
இடிந்துவிழுந்த கட்டடம்.
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சத்யா நிகேதனத்தில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

செப். 6 அன்று விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் வரை பலியாகினர். தங்கு விடுதி மற்றொருவருடன் இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் சுபம் தியாகி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவைக் கூடுதல் அமர்வு நீதிபதி சௌரப் பிரதாப் லலேர் விசாரித்தார்.

முன்ஜாமீன் கோரிய மனுவில் மறைக்கப்பட்டிருந்த இரண்டாவது, மூன்றாவது தளங்களுக்கான வாடகை ஒப்பந்தம் மற்றும் மற்றொரு குற்றவாளியான சுதன்ஷுவுடனான ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தம் ஆகிய அனைத்துச் சூழல்களையும் கருத்தில் கொண்டு நீதிபதி இந்த மனுவை நிராகரித்தார்.

Advertisement

Advertisement

சத்யா நிகேதனத்தில் தங்கும் விடுதிகளை நடத்துவதில் ஒரு கூட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால், மனுதாரரான சுபம் தியாகி இதுகுறித்த அறிவு, ஒப்புதல் மற்றும் நிதி அல்ல செயல்பாட்டுப் பங்கு ஆகியவை குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதையடுத்து தில்லி வழக்குரைஞர் மன்றத்தில பதிவு செய்யப்பட்ட வழக்குரைஞர் என்றும், பாட்டியாலா நீதிமன்றங்களில் பயிற்சி செய்து வருவதாகவும் சுபம் தியாகி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சுதான்ஷு நடத்தி வந்த விடுதியில் பணத்தை முதலீடு செய்தது தவிர, அந்தக் கட்டடத்தின் கட்டமைப்பு மீது தனக்கு எந்தவிதமான உரிமையோ, பட்டாவோ, கட்டுப்பாடோ இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் வாதிட்டார்.

இருப்பினும், இதுதொடர்பாக விரிவான விசாரணை கோர வேண்டும் என்றும், முன்ஜாமீன் வழங்குவதற்கான முகாந்திரம் இல்லை எனவும் நீதிமன்றம் சுபம் தியாகியின் மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments