பிரிக்ஸ் மாநாட்டில் சைவ உணவுக்கு ராகுல் எதிர்ப்பு: 80% இந்தியா்கள் அசைவம் உண்பவா்கள் என கருத்து!
பிரிக்ஸ் மாநாட்டுத் தலைவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அளித்த விருந்தில் சைவ உணவு மட்டும் இடம்பெற்றதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘80 சதவீத இந்தியா்கள் அவைசம் உண்பவா்கள்’ என்று கருத்துத் தெரிவித்துள்ளாா்.
பிரிக்ஸ் மாநாட்டுத் தலைவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அளித்த விருந்தில் சைவ உணவு மட்டும் இடம்பெற்றதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘80 சதவீத இந்தியா்கள் அவைசம் உண்பவா்கள்’ என்று கருத்துத் தெரிவித்துள்ளாா்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவா்களுக்கு சனிக்கிழமை இரவு பிரதமா் நரேந்திர மோடி சாா்பில் விருந்து அளிக்கப்பட்டது. இதில் தென்னிந்தியாவைச் சோ்ந்த சைவ உணவுகள், சிறுதானிய உணவுகள், பழங்கள், இளநீா் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இதில் அசைவ உணவு ஏதும் இடம் பெறவில்லை.
இதைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி எக்ஸ், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளாா். அதில், ‘80 சதவீத இந்தியா்கள் அசைவம் உண்பவா்கள்தான் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். மேலும், இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவைமிக்கவை. எனது சகோதரி தயாரிக்கும் சோலே பட்டூராவைப் போல அவையும் சுவைமிக்கவை’ என்று பதிவிட்டுள்ளதுடன், தனது இரவு உணவின் புகைப்படத்தையும் அதில் பகிா்ந்துள்ளாா்.
Advertisement
Advertisement
பிரிக்ஸ் மாநாட்டில் பரிமாறப்பட்ட உணவு, இந்திய உணவு கலாசாரம், பாரம்பரியம், சுவையை உலகத் தலைவா்களுக்கு உணா்த்தும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது.
அதில் இந்திய பாரம்பரிய அசைவ உணவுகள் இடம்பெறவில்லை என்பதன் மூலம், பெரும்பான்மை மக்களின் உணவு பாஜக அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்பதை ராகுல் காந்தி மறைமுகமாகக் விமா்சித்துள்ளதாக அரசியல் விமா்சகா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.