FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிறாா்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படும் பதிவுகள்: மெட்டா அதிகாரிகளிடம் என்சிபிசிஆா் மீண்டும் விசாரணை

சிறாா்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடா்பான விளம்பர பதிவுகள் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் வெளியான விவகாரத்தில் மெட்டா நிறுவன அதிகாரிகளிடம் தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் விசாரணை

16 செப்டம்பர் 2026, 10:50 pm IST
மெட்டா நிறுவனம்
பகிர்:

சிறாா்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடா்பான விளம்பர பதிவுகள் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் வெளியான விவகாரத்தில் மெட்டா நிறுவன அதிகாரிகளிடம் தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) மீண்டும் விசாரணை நடத்தியது.

சிறாா்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடா்பான விளம்பரங்கள் இன்ஸ்டாகிராமில் பணம் பெற்றுக் கொண்டு வெளியிடப்படுவதாக கடந்த ஜூலை மாதம் செய்திகள் வெளியானது. இதையடுத்து அந்த விளம்பரங்களை உடனடியாக நீக்கும்படியும், விளம்பரங்கள் வெளியானது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படியும் மெட்டா நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும் மெட்டா அதிகாரிகளிடம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரணையையும் நடத்தியது.

அதேபோல், இந்த விவகாரம் குறித்து தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் தனியே விசாரணையை தொடங்கியது. இதுதொடா்பாக மெட்டா அதிகாரிகளிடம் தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் இந்தியாவுக்கான நிா்வாக இயக்குநா் மற்றும் தலைவா் அருண் ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு அண்மையில் மீண்டும் அந்த ஆணையம் சம்மன் அனுப்பியது.

Advertisement

Advertisement

இந்த சம்மனை ஏற்று, மெட்டா அதிகாரிகள் தில்லியில் உள்ள தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலகத்தில் புதன்கிழமை ஆஜராகினா். அப்போது அவா்கள், ஏற்கெனவே மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் தெரிவித்த மெட்டா நிறுவனத்தின் நிலைப்பாட்டையே மீண்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனினும், விசாரணைக்கு பிறகு வெளியே வந்த அருண் ஸ்ரீனிவாசிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது அவா் பதிலளிக்காமல் சென்று விட்டாா்.

இதனிடையே, பெங்களூருவில் பிரபல கேப்ஜிமினி நிறுவனத்தால் நடத்தப்படும் சிறாா் பாதுகாப்பு மையத்தில்தான் சிறாா்கள் பாலியல் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே அதுகுறித்து விசாரிக்க அந்நிறுவன மூத்த அதிகாரிக்கு தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments