பொய்ச் செய்தி! பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற அதிபர்கள் உடல்நிலை... மத்திய அரசு விளக்கம்!
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற அதிபர்கள் உடல்நிலை குறித்து வெளியாவது பொய்ச் செய்தி என மத்திய அரசு விளக்கம்...
புது தில்லியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் சிலருக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.
அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பொய்யான செய்தி என்று எச்சரிக்கை விடுத்திருக்கும் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம், சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பும் பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் சிலருக்கு மிக மோசமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதாக சில சமூக ஊடகங்களில், புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
Advertisement
Advertisement
அதாவது, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ராம்போசா உள்ளிட்டோருக்கு கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
சீனாவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் வான்ஜுன் ஜி, வெளியிட்ட பதிவில், சீன அதிபர், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றிருந்தபோது மயங்கி விழுந்தார். அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, உடனடியாக சீனாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியிருக்கிறார். ஆனால், இது குறித்து சீனா தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
பிரிக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து பிரதமர் மோடி அளித்த விருந்தில் சீன அதிபர் பங்கேற்காததன் அடிப்படையில் எழுந்த ஊகமாக இது பார்க்கப்படுகிறது.
அதுபோலவே, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று தென்னாப்ரிக்கா திரும்பிய பிறகு, அதிபர் ராம்போசா பொது நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
அவரது அலுவலகம் வெளியிட்ட தகவலில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், அவருக்கு எந்தவிதமான உடல்நலப் பாதிப்பு என்று வெளியிடப்படவில்லை.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தென்னாப்ரிக்கா திரும்பியதும் திங்கள்கிழமை சில பொது நிகழ்ச்சிகளில் ராம்போசா பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில்தான், சமூக வலைத்தளசத்தில் வெளியான பதிவுகளில் வரும் தகவல்கள் உண்மையில்லை, பொய்ச் செய்தி என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
புது தில்லியில் செப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் பிரதமா் மோடி, ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியான், தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராம்போசா, இந்தோனேசிய அதிபா் பிரபுவோ சுபியான்டோ, எகிப்து அதிபா் அப்தெல் பத்தா அல் சிசி, இந்தோனேசிய அதிபா் பிரபுவோ சுபியாந்தோ, எத்தியோப்பிய அதிபா் அபே அகமது அலி, மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம், சவூதி அரேபிய இளவரசா் பைசல் பின் பா்ஹான் அல் சவுத், ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசா் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜயித் அல் நஹான், பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சா் மெளரோ வியரியா உள்ளிட்டோா் பங்கேற்றிருந்தனர்.
Fake news! Health status of presidents who attended the BRICS summit... Central Government clarifies!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.