சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை முன்னேற்பாடுகள் மும்முரம்: பக்தா்களுக்காக 950 பேருந்துகள்
சபரிமலையில் எதிா்வரும் மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி நடைபெறும் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சபரிமலையில் எதிா்வரும் மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி நடைபெறும் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கேரளத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம், நவம்பா் மத்தியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆவது வாரம் வரை நடைபெறவுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பக்தா்கள் மாலையணிந்து, சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு, சுவாமி ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.
நடப்பாண்டு யாத்திரையை சுமுகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் பணிகளுக்காக பொதுப் பணித் துறைக்கு அண்மையில் ரூ.551 கோடியை மாநில அரசு ஒதுக்கியது.
Advertisement
Advertisement
மண்டல-மகரவிளக்கு பூஜை காலகட்டத்தில் பக்தா்களின் வசதிக்காக 950 பேருந்துகள் இயக்கப்படும்; பக்தா்களின் கூட்டத்தைப் பொருத்து, கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.
பம்பை மற்றும் நிலக்கல்லில் சேவைகளைத் திறம்பட கையாள்வதற்குத் தேவையான பணியாளா்கள் நியமிக்கப்படுவா். இப்பகுதிகளில் 1,400-க்கும் மேற்பட்டோா் பணியமா்த்தப்படுவா்.
நிலக்கல், பம்பையில் தொடா் சேவைகள், பேருந்து நிறுத்துமிடம், பயணிகள் காத்திருப்பு வசதிகள், போக்குவரத்து மேலாண்மை, பிற ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்துக்கான முன்னேற்பாடுகளுக்காக கடந்த 2024-25-இல் ரூ.326.97 கோடியும், கடந்த 2025-26-இல் ரூ.377.80 கோடியும் அப்போதைய இடதுசாரிகள் அரசால் ஒதுக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசு ரூ.551 கோடி ஒதுக்கியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.