FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ம.பி.யில் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டு 8 பேர் பலி!

மத்தியப் பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கில் வடிகாலில் கார் விழுந்தது பற்றி..

19 செப்டம்பர் 2026, 4:52 pm IST
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார் - X
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலையில் வெள்ளம் பெருக்கெடுத்திருந்த வடிகாலில் கார் விழுந்ததில் மூன்று குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பபேர் உயிரிழந்தனர்.

நல்கேடா நகரில் அமைந்துள்ள பகளாமுகி கோயிலுக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக நல்கோடா காவல் நிலையப் பொறுப்பாளர் சஷி உபாத்யாய் தெரிவித்தார்.

ஒடிசாவைச் சேர்ந்த பக்தர்கள் பயணித்த கார், மழைநீரால் நிரம்பி வழிந்த வடிகாலில் விழுந்ததாகவும், இதில் 3 குழந்தைகள், 2 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் அனைவரும் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

நல்கேடா காவல்துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு உடல்களை மீட்டெடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments