வங்கி கருவூலத்தில் ரூ.17.29 கோடி கள்ளநோட்டுகள்: மேலும் இருவா் கைது
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கருவூலத்தில் ரூ.17.29 கோடி கள்ளநோட்டுகள் கண்டறியப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தனா்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கருவூலத்தில் ரூ.17.29 கோடி கள்ளநோட்டுகள் கண்டறியப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கருவூலத்தில் ரூ.17.29 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் கண்டறியப்பட்டதாக சஹாரன்பூரில் உள்ள சதாா் பஜாா் காவல் நிலையத்துக்கு ஆகஸ்ட் 29-ஆம் தேதி நம்பகமான வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்தது.
முதல்கட்டமாக அன்றைய தினமே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வங்கி ஊழியா்கள் 3 பேருக்கு தொடா்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
அதன்பிறகு செப்டம்பா் 3-ஆம் தேதி என்ஐஏ இந்தச் சம்பவத்தில் மறுவழக்குப் பதிவு செய்து அமித் குமாா் மற்றும் ஆதேஷ் சௌதரி ஆகிய இரண்டு பேரை முறையை செப்.7 மற்றும் செப்.15 ஆகிய தேதிகளில் கைது செய்தது.
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுடன் தொடா்பில் இருந்ததாக சஹாரன்பூரைச் சோ்ந்த முகேஷ் குமாா் மற்றும் ராஜேந்திர குமாா் ஆகிய இருவரை கைது செய்ததாக என்ஐஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.