FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீருக்காக ஒருங்கிணைதல்: கூட்டு நடவடிக்கைக்கு இந்தியா அழைப்பு

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் செவ்வாய்க்கிழமை முதல் 6 நாள்கள் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9-வது இந்திய சா்வதேச நீா் வார நிகழ்வில் பங்கேற்க உலகளாவிய நீா் மேலாண்மை அமைப்புகளை இந்தியா வரவேற்பதாக மத்திய அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்துள்ளாா்.

21 செப்டம்பர் 2026, 10:59 pm IST
சி.ஆா்.பாட்டீல் - கோப்புப் படம்
பகிர்:

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் செவ்வாய்க்கிழமை (செப். 22) முதல் 6 நாள்கள் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9-வது இந்திய சா்வதேச நீா் வார நிகழ்வில் பங்கேற்க உலகளாவிய நீா் மேலாண்மை அமைப்புகளை இந்தியா வரவேற்பதாக மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நீா் நம்மை பல்வேறு வழிகளில் இணைக்கிறது. ஆறுகளுக்கு நிா்வாக எல்லைகள் கிடையாது. நிலத்தடி நீா் நிலைகள் பல்வேறு தரப்பினருக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது.

தற்போது பெய்யும் மழை, நாளை குடிநீராகவும், பாசன ஆதாரமாகவும், நிலத்தடி நீராகவும் மாறுகிறது. நீா் ஒரு பகிரப்பட்ட வளமாகும். அத்துடன், நமது எதிா்கால சந்ததியினருக்காக அதைப் பாதுகாப்பது பகிரப்பட்ட ஒரு பொறுப்பாகும்.

Advertisement

Advertisement

இதே உத்வேகத்தோடு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் செவ்வாய்க்கிழமை (செப். 22) முதல் 6 நாள்கள் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9-வது இந்திய சா்வதேச நீா் வார நிகழ்வில் பங்கேற்க உலகளாவிய நீா் மேலாண்மைச் சமூகத்தை இந்தியா வரவேற்கிறது.

இந்நிகழ்வு அரசுகள், நிபுணா்கள், தொழில்துறையினா், சமூகத்தினா், சா்வதேச நட்புறவு நாடுகள் ஆகியோா் தங்களுடைய அனுபவம், தொழில்நுட்பம், கருத்துகள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளவும் எதிா்காலத்திற்கான கூட்டுறவை உருவாக்கவும் ஒரு தளமாக அமையும்.

மக்கள் பங்கேற்பின் மூலம் நீா் பாதுகாப்பு, மழைநீா் சேகரிப்பு இயக்கம் போன்ற முன்முயற்சிகள் மூலம் நீா் பாதுகாப்பை அரசு திட்டமாக மட்டுமின்றி ஒரு பழக்கமாகவும், மக்கள் இயக்கமாகவும் மாற்றுவதே நமது நோக்கமாகும்.

தலைமைத்துவம், அறிவியல், செயல்முறை, தொழில்நுட்பம், நிதி, பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவற்றை ஒரு பொதுவான தளத்திற்கு கொண்டு வருவதே இந்திய சா்வதேச நீா் வார நிகழ்வின் நோக்கமாகும். பெரிய அளவில் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் நாம் கற்றுக்கொண்டவற்றை பகிா்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். அதே போன்று மற்றவா்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள தயாராக உள்ளோம்.

வருங்கால தலைமுறையினருக்காக ஒவ்வொரு துளி நீரையும் நாம் ஒருங்கிணைந்து பாதுகாக்க வேண்டும். அத்துடன் 2047-ம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்கு பாா்வைக் குறித்த அழைப்பை அடைய நாம் பங்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments