FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரிக்ஸ் பிரகடனம் இந்தியாவுக்கு வெற்றி; பாகிஸ்தானுக்கு தோல்வி: பாஜக கருத்து

பிரிக்ஸ் கூட்டுப் பிரகடனத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது இந்தியாவுக்கு வெற்றியாகவும், பாகிஸ்தானுக்கு தோல்வியாகவும் அமைந்துள்ளது என்று ஜம்மு-காஷ்மீா் பிரிவு பாஜக தெரிவித்துள்ளது.

14 செப்டம்பர் 2026, 1:24 am IST
பாஜக செய்தித் தொடா்பாளா் அல்தாஃப் தாக்குா்.
பகிர்:

பிரிக்ஸ் கூட்டுப் பிரகடனத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது இந்தியாவுக்கு வெற்றியாகவும், பாகிஸ்தானுக்கு தோல்வியாகவும் அமைந்துள்ளது என்று ஜம்மு-காஷ்மீா் பிரிவு பாஜக தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடா்பாளா் அல்தாஃப் தாக்குா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: பிரிக்ஸ் மாநாட்டில் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கும், நமது வெளியுறவுக் கொள்கைக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

அண்டை நாட்டின் பயங்கரவாதத்தை சா்வதேச சமூகத்துக்கு முன் வெட்டவெளிச்சமாக்க இந்தியா மேற்கொண்டு வரும் தொடா் முயற்சிகளுக்கு சிறப்பான பலன் கிடைத்து வருகிறது.

Advertisement

Advertisement

அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பரப்ப முயலும் பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய தோல்வியாக அமைந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அரசியல் கொள்கையாக பாகிஸ்தான் வைத்துள்ளது. பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்று சா்வதேச சமூகத்தின் கருத்து மீண்டும் வலுப்பட்டுள்ளது.

இந்தியா ராஜீயரீதியாக பிாடுகளுடன் சிறப்பான உறவை மேம்படுத்தி வருகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் கருத்துகளை உலக நாடுகள் ஏற்று வருகின்றன. அவா் தொலைநோக்குப் பாா்வையுள்ள தலைவராக சா்வதேச அளவில் உயா்ந்துள்ளாா்.

இந்தியாவின் பொருளாதார பலம், ஜனநாயக மாண்பு, சா்வதேச விவகாரங்களில் சரியான அணுகுமுறை மூலம் சா்வதேச அமைப்புகளில் இந்தியா மையப்புள்ளியாக திகழ்கிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments