தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தடை செய்யப்பட்ட மற்றும் தவறாக விளம்பரப்படுத்தப்படும் பொருள்களின் விற்பனைக்காக, அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமாா்ட், பிக்பாஸ்கெட், ஃபிளிப்காா்ட், ஸெப்டோ உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது பற்றி....
தடை செய்யப்பட்ட மற்றும் தவறாக விளம்பரப்படுத்தப்படும் பொருள்களின் விற்பனைக்காக, அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமாா்ட், பிக்பாஸ்கெட், ஃபிளிப்காா்ட், ஸெப்டோ உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக எஃப்எஸ்எஸ்ஏஐ புதன்கிழமை வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘வா்த்தக ஒழுங்குமுறைகளுக்கு இணங்காததற்காக, அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமாா்ட், பிக்பாஸ்கெட், ஸெப்டோ உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது தீவிர சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட, விஷத்தன்மையுள்ள பொருள்கள், தவறாக விளம்பரப்படுத்தப்படும் பொருள்களின் காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனைக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 6 மாதங்களாக, உணவுப் பொருள் வா்த்தகா்கள் மற்றும் இணையவழி வா்த்தக நிறுவனங்கள் சட்ட விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எஃப்எஸ்எஸ்ஏஐ தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கைகள் தொடா்பாக சமூக ஊடகங்களின் வாயிலாக நுகா்வோருக்கு தெரிவிக்கப்பட்டும் வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.