வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு: நள்ளிரவில் வெளியான அறிவிப்பு!
வங்கி ஊழியர்கள் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக நள்ளிரவில் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 5 நாள்களுக்கு வேலைத்திட்டத்தை அமல்படுத்துவது, அனைத்து ஊழியர்களுக்கும் திறன்சார்ந்து ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய அளவில் செப். 28 (இன்று) முதல் செப். 30-ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.
இந்த 3 நாள்கள் வேலை நிறுத்தத்துக்கு முன்னதாக சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் என்பதால், 5 நாள்கள் வங்கிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. 5 நாள்கள் வங்கிகள் செயல்படாமல் போனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதி செப். 27 (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தன்படி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அனைத்து தனியார் வங்கிகளும் செப். 27-ல் செயல்பட்டன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஐந்து நாள் வேலை வாரம் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு இந்திய வங்கிகள் சங்கம் உறுதியளித்ததை அடுத்து, வங்கி ஊழியர்களின் மூன்று நாள்கள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக ஐக்கிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும், வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதால், வங்கிகள் திங்கள்கிழமை முழுமையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
It has been suddenly announced that the three-day strike by bank employees is being postponed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.