FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தனிக் கட்சி வழிகாட்டுதல்படி தேர்தல் ஆணையம் செயல்பட்டால்... வேறு என்ன இருக்கும்? நீதிமன்றம்

தனிக் கட்சி வழிகாட்டுதல்படி தேர்தல் ஆணையம் செயல்பட்டால் வேறு என்ன இருக்கும்? கொல்கத்தா நீதிமன்றம் கருத்து..

கொல்கத்தா நீதிமன்றம் - ani
பகிர்:

தனிக் கட்சி ஒன்றின் வழிகாட்டுதல்படி தேர்தல் ஆணையம் செயல்பட்டால் வேறு என்னதான் மிச்சம் இருக்கும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்துள்ளது.

ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இடைத்தேர்தலில் உறை சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவதில் தேர்தல் ஆணையத்தை நடத்தை குறித்து கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களைக் கொண்ட ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், அரசியல் கட்சித் தரப்பினரின் செயல்பாடு அவர்களுக்கு இடையிலான கூட்டுச் சதியை வெளிப்படுத்துகிறது. ஒருவேளை, அரசியல் கட்சியின் வழிகாட்டுதல்படி தேர்தல் ஆணையம் செயல்பட்டால், பிறகு மிச்சம் என்னதான் இருக்கும்? ஒரு தனிக் கட்சியின் உதவியோடு நீங்கள் செயல்பட முடியாது என்றும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா ராவ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

கடந்த பேரவைத் தேர்தலில், ஒரு கட்சிக்கு உறை சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், இடைத் தேர்தலில் அதே சின்னம் ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அண்மையில் கடந்த தேர்தலில் ஒதுக்கிய சின்னங்களைக்கூட, தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்து பிற சின்னங்களை ஒதுக்காதா? பிரச்னையைத் தொடங்கிவிடுகிறீர்கள், அரசியல் கட்சிகள் நீதிமன்றத்துக்கு வந்துவிடுகிறார்கள், இதனால் நீதிமன்றங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது என்று கடந்த விசாரணையின்போது நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தார் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments