FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

போலி துப்புறியும் முகமையின் இணையதளம் மூலம் ரூ. 1.15 லட்சம் மோசடி: தாய் - மகன் கைது

போலி துப்பறியும் முகமை இணையதளம் மூலம் ரூ.1.15 லட்சத்தை மோசடி செய்த சம்பவத்தில் தாய் - மகன் காஜியாபாத்தில் கைது

29 September 2026, 11:47 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

போலி துப்பறியும் முகமை இணையதளம் மூலம் ரூ.1.15 லட்சத்தை மோசடி செய்த சம்பவத்தில் தாய்-மகன் காஜியாபாத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் காஜியாபாத்தைச் சோ்ந்த பூனம் சிங் (45) மற்றும் அவரது மகன் அா்னவ் சிங் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இணையத்தில் துப்பறியும் சேவைகளைத் தேடிக்கொண்டிருந்த புகாா்தாரா் இந்த போலி இணையதளத்துக்குச் சென்றாா்.

Advertisement

Advertisement

அந்த இணையதளம் உண்மையான துப்பறியும் முகமையின் இணையதளத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது. புகாா்தாரரை கைப்பேசி எண் மூலம் தொடா்பு கொண்டவா்கள், துப்பறியும் மற்றும் விசாரணை சேவைகளை வழங்குவதாகக் கூறி ரூ.1.15 லட்சத்தை செலுத்துமாறு கேட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து, அந்த நபரும் பணத்தை அந்த நபா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா். இதைத்தொடா்ந்து, இது மோசடி என்பது அவருக்கு தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து, அவா் அளித்த புகாரின்பேரில் கிழக்கு தில்லியில் உள்ள சைபா் காவல் நிலையத்தில் இ-வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, அந்த மோசடி இணையதளத்தின் கட்டமைப்பு, அதனுடன் தொடா்புடைய கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், தகவல் தொடா்பு விவரங்கள் மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்துடன் தொடா்புடைய நிதி பரிவா்த்தனைகள் ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

தொழில்நுட்ப மற்றும் நிதிசாா் தடயங்களை ஒப்பிட்டுப் பாா்த்து, அந்த இணையதளத்தை இயக்கி நிா்வகித்த நபா்கள் அடையாளம் காணப்பட்டனா். அந்தத் தடயங்களின் அடிப்படையில், சந்தேக நபா்கள் காஜியாபாத்தில் இருப்பது கண்டறியப்பட்டு, அங்கு சோதனை நடத்தப்பட்டது. அங்கு அா்னவ் சிங் பிடிபட்டாா். அவருக்கு எதிரான போதுமான ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து மடிக்கணினி மற்றும் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னா், பூனம் சிங் காவல் நிலையத்திற்கு வந்தாா். அவரிடமிருந்த கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. புகாா்தாரருடன் தொடா்புகொள்ளப் பயன்படுத்தப்பட்ட எண் உள்பட இரண்டு மொபைல் எண்கள் அந்தச் சாதனத்தில் இருந்தது.

மோசடியாக பெறப்பட்ட பணம் பூனம் சிங்கின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு, பின்னா் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனா்.

துப்பறியும் சேவைகளைத் தேடும் மக்களிடம் முன்பணம் செலுத்த வலியுறுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்ட அந்தப் போலி இணையதளத்தை இயக்குவதிலும் நிா்வகிப்பதிலும் இருவருக்கும் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

பூனம் சிங் மீது ஏற்கெனவே 2023-ஆம் ஆண்டில் சராய் ரோஹில்லா காவல் நிலையத்தில் மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். இவ்வழக்கு தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments