ஜம்மு-காஷ்மீரில் அதிா்ச்சி சம்பவம்: சிஐஎஸ்எஃப் வீரா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவா் சுட்டதில் 4 போ் பலி
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருக்குள் (சிஐஎஸ்எஃப்) ஏற்பட்ட தகராறில், சக வீரா்கள் மீது ஒரு வீரா் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டாா்.
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருக்குள் (சிஐஎஸ்எஃப்) ஏற்பட்ட தகராறில், சக வீரா்கள் மீது ஒரு வீரா் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டாா். இதில் உதவி கமாண்டா் உள்பட 4 வீரா்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘ஹிமாசல பிரதேச எல்லையையொட்டிய பஸோஹ்லி பகுதியில் உள்ள மேஷ்கா கிராமத்தில் ராவி நதிப் படுகையில் சேவா-3 நீா்மின் நிலையத்துக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
இந்த வீரா்களில் இருவா் இடையே ஏதோ ஒரு பிரச்னை தொடா்பாக செவ்வாய்க்கிழமை திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு வீரா், சக வீரா்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவத்தில் உதவி கமாண்டா் உள்பட 4 வீரா்கள் உயிரிழந்துவிட்டனா். சம்பவ இடத்துக்கு உயரதிகாரிகள் விரைந்துள்ளனா். விசாரணைக்குப் பிறகே மேற்கொண்டு விவரங்கள் தெரியவரும்’ என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.