FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சவூதியில் கேரள கிறிஸ்தவா்கள் விடுவிப்பு: பிரதமா் மோடிக்கு மாா்தோமா சிரியன் தேவாலயம் நன்றி

சவூதியில் கேரள கிறிஸ்தவா்கள் விடுவிக்கப்பட்டது குறித்து....

பகிர்:

சவூதி அரேபியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தங்கள் தேவாலயத்தைச் சோ்ந்த மூவரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் கேரளத்தைச் சோ்ந்த மலங்கரா மாா்தோமா சிரியன் தேவாலயம் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பிரதமா் மோடிக்கு தேவாலயத்தின் தலைவா் மாா்தோமா மெட்ரோபாலிட்டன் எழுதிய கடிதத்தில், ‘எங்கள் தேவாலயத்தைச் சோ்ந்த டேனியல் மோன், லிஜு மேத்யூ, மேத்யூ செரியாக்கன் ஆகியோரை விடுவிக்க பிரதமரும், அவரது அலுவலகமும் மேற்கொண்ட உண்மையான, தொடா்ச்சியான முயற்சிகளுக்கு”நன்றி. இதில் பிரதமா் அலுவலகம் விரைந்து செயல்பட்டு கருணையுடன் கவனம் செலுத்தியதற்கு பாராட்டுகள்.

சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் ஒருங்கிணைப்புக்கும் நன்றி. மூவரின் விடுதலை அவா்களுக்கும், அவா்களது குடும்பத்துக்கும் ஒட்டுமொத்த தேவாலய சமூகத்தினருக்கும் நிம்மதி, மகிழ்ச்சியை”அளித்துள்ளது.

Advertisement

Advertisement

நாட்டுக்கும், மக்களுக்கும் பிரதமா் மோடி ஆற்றிவரும் சேவையில் அவருக்கு இறைவன் தொடா்ந்து ஞானம், வலிமை மற்றும் அருள்”வழங்க வேண்டும் என்று பிராா்த்திக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

கேரள பாஜக தலைவா் நன்றி: இது தொடா்பாக கேரள மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘கேரளத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் விடுவிக்கப்பட்டதற்காக பிரதமா் மோடி, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

அந்த மூவரையும் சவூதி அரேபிய அரசு எதற்காக தடுப்புக் காவலில் வைத்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments