FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!

தில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டம் பற்றி...

இந்தியா கூட்டணிக் கூட்டம் - Photo: INC
பகிர்:

தில்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்டமுறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டம் கூடியுள்ளது.

தில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், இந்த கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி, பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

19 கட்சிகள் பங்கேற்பு

இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜவாதி காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவசேனை(உத்தவ்), ராஷ்ட்ரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, சிபிஎம்-எம்எல், இந்திய முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, ஆர்எஸ்பி, கேரள காங்கிரஸ் மற்றும் ஏஐஎஃப்பி உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத் தலைவருக்கு 'அழுத்தம்' கொடுத்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.

summary

India alliance meeting started in Delhi! 19 parties participating!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments