இது தெரியுமா? கிணறுகள் பெரும்பாலும் வட்ட வடிவிலேயே இருப்பது ஏன்?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
கிணறுகள் பெரும்பாலும் வட்ட வடிவிலேயே இருப்பதற்கு என்ன காரணம்?
வெகு சில இடங்களில் சதுரம் மற்றும் செவ்வக வடிவில் காணப்பட்டாலும், பெரும்பாலும் கிணறுகள் வட்ட வடிவிலேயே அமைக்கப்படுகின்றன.
இதற்குக் காரணம், வட்ட வடிவத்துக்கு சதுரத்துக்கு இருப்பது போல நான்கு முனைகள் இல்லை. பிற வடிவங்களுக்கும் முனைகள் இருப்பதால், முனைகளில் எவ்வளவுதான் பிடிமானம் இருந்தாலும் காலப்போக்கில் இடிந்து விழ வாய்ப்புண்டு.
Advertisement
Advertisement
அதுவே வட்ட வடிவமாக இருந்தால் அவ்வளவு எளிதில் இடிந்து விழாது. மேலும், வட்ட வடிவமாக இருப்பதால் கிணற்றினுள் சீரான அழுத்தம் பராமரிக்கப்படும்.
வட்ட வடிவத்தின் சுற்றளவு பிற வடிவங்களின் சுற்றளவை விட குறைவாகவே இருக்கும். இதனால் வட்ட வடிவில் கிணறுகளை அமைப்பதற்கான செலவும் குறைவாகவே இருக்கும்.
கிணறுகளின் நீண்ட கால பயன்பாட்டுக்காகவே இந்த வடிவம் நமது முன்னோர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
About rare information that children should know
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.