தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில் விவசாயிகள் கொடுக்கும் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ2.175 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு டன்னுக்கு 2,250 வழங்க அறிவித்துள்ளது. இருப்பினும் விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்து வரும் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை 11.10 மணியளவில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள கரும்பு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.