தஞ்சாவூரில் இளைஞர் வெட்டிக் கொலை : முன்விரோதம் காரணமா?
தஞ்சாவூர் அருகே கரந்தை பகுதியைச் சேர்ந்த மலையரசன் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் அருகே கரந்தை பகுதியைச் சேர்ந்த மலையரசன் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் அருகே கரந்தை பகுதியில் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மலையரசன் (27).
இவர் கரந்தை போக்குவரத்துக் கழக பணிமனை அருகே இன்று முற்பகல் 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த மலையரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட மலையரசன் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதால், இவர் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.