FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை: பொன். ராதாகிருஷ்ணன்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் விருப்பம். இதற்கு கட்சி மேலிடம் அனுமதி அளிக்கும். வேட்பாளர் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம்

Updated On : 14 ஜனவரி 2015, 5:50 pm IST
பகிர்:

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை சென்னை வந்த அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் விருப்பம். இதற்கு கட்சி மேலிடம் அனுமதி அளிக்கும். வேட்பாளர் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம் தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதற்காக மத்திய வனத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன்.இலங்கையின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் வரும் 18-ஆம் தேதி தில்லி வருகிறார். அப்போது தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மத்திய அரசு அழுத்தம் திருத்தமாக விவாதிக்கும்.

Advertisement

Advertisement

பாஜக எம்.பி. தருண் விஜய் மேற்கொண்டுள்ள திருவள்ளுவர் திருப்பயணம் குறித்து சிலர் விமர்சிக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. தமிழும், திருவள்ளுவரும் குறிப்பிட்ட கட்சியோ, குடும்பமோ சொந்தம் கொண்டாட முடியாது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments