FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டில் புதிதாக 38,628 பேருக்கு தொற்று: 617 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 38,628 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 7 ஆகஸ்ட் 2021, 10:58 am IST
கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 38,628 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 617 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், நாட்டில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது. 

கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய பாதிப்பு 44,643 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிததாக 38,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் சனிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 38,628 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,18,95,385-ஆக உயா்ந்துள்ளது. இதன் மூலம், கடந்த 12 நாள்களாக தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 3 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தது.

40,017 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,10,55,861 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை  4,12,153 -ஆக உள்ளது. தேசிய அளவில் மீட்பு விகிதம் 97.37 சதவிகிதமாக உள்ளது. 5 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்த வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 2.39 சதவிகிதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 617 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,27,371 -ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 50,10,09,609 கோடியாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் 49,55,138 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை மொத்தம்47,83,16,964 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வியாழக்கிழமை மட்டும் 17,50,081 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments