முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்வீட் பாக்ஸுக்காகக் காத்திருக்கிறேன்: ஸ்டாலின் வாழ்த்துக்கு ராகுல் பதில்!

என்னுடைய ஸ்வீட் பாக்ஸுக்காக காத்திருக்கிறேன் என்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

Updated On : 19 ஜூன், 2024 at 6:15 PM
பகிர்:

பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்குப் பதிலளிக்கும் வகையில், எனக்கு உரிய ஸ்வீட் பாக்ஸுக்காகக் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி பிறந்த நாளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், கோவை பிரசாரத்துக்கு ராகுல் காந்தி வந்திருந்தபோது, ஸ்வீட் பாக்ஸ் வாங்கிவந்து வழங்கிய விடியோவை இணைத்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பதிவில், “உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரரே, எனக்கு உரிய ஸ்வீட் பாக்ஸுக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

ராகுல் காந்தி தனது பிறந்த நாளை தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 19) கேக் வெட்டி கொண்டாடினார், பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.