திருநள்ளாறு நள நாராயணபெருமாள் கோயில் கொடிமரம் முறிந்து விழுந்தது!
பிரம்மோற்சவம் தொடக்கமாக கொடியேற்றும் நேரத்தில் திருநள்ளாறு நள நாராயண பெருமாள் கோயில் கொடி மரம் முறிந்து விழுந்தது.
காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலை சேர்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நள நாராயண பெருமாள் கோயில், வெகுவாக பக்தர்களை ஈர்க்கும் கோயிலாக விளங்குகிறது.
இக்கோயில் உள்ள ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சனேயரை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவம் நிகழாண்டு கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 10.30-க்குள் தொடங்குவதற்கான பூஜை நடைபெற்றது. கொடி மரத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கொடிமரம் முறிந்து விழுந்தது.
Advertisement
Advertisement
உரிய பராமரிப்பு இல்லை என பக்தர்கள் பலரும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருநள்ளாறு ஸ்ரீ நளபுர நாயகி சமேதே நள நாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் திட்டமிட்ட நேரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கவில்லை.
மாற்று ஏற்பாடு செய்வதற்கான பணிகளில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.