முகப்பு
தற்போதைய செய்திகள்

தோனியின் வழிகாட்டுதலில் விளையாட ஷர்துல் தாக்குர் ஆர்வம்!

மகேந்திர சிங் தோனியிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள ஆவலாக இருப்பதாக இந்திய அணியின் ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 மார்ச் 2024, 1:05 pm IST
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து மகேந்திர சிங் தோனியிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள ஆவலாக இருப்பதாக இந்திய அணியின் ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். அதன்பின் 2022 ஆம் ஆண்டில் தில்லி கேப்பிடல்ஸ் அணியிலும், கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் விளையாடினார். கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் அவர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து மகேந்திர சிங் தோனியிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள ஆவலாக இருப்பதாக ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூற வேண்டுமென்றால், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சியில் விளையாடுவதற்கு ஆவலாக உள்ளேன். அவரது வழிகாட்டுதலில் விளையாடும்போது நீங்கள் நிறைய கற்றுக் கொள்வீர்கள். விக்கெட் கீப்பராக ஸ்டம்புக்குப் பின்னால் இருந்து அவர் உங்களை வழிநடத்தும் விதம் உங்களின் வளர்ச்சிக்கு உதவும். சிஎஸ்கே அணியில் மீண்டும் இணையவுள்ளது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்றார்.

கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஷர்துல் தாக்குர் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.