ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: ஜாம்ஷெட்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் 
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: முன்னிலை நிலவரம்

கேரள மாநிலம், வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை

DIN

கேரள மாநிலம், வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் வாக்கு எண்ணும் மையங்களில் அதிகாரிகள் தபால் வாக்குகளை சரிபார்த்து எண்ணத் தொடங்கினர், அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி முன்னிலை நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி முதல்முறையாக போட்டியிட்ட தோ்தல் என்பதால், வயநாடு தொகுதி இடைத்தோ்தல் முடிவு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மகாராஷ்டிரம்:

மொத்த தொகுதிகள் - 288 பெரும்பான்மைக்கு - 145

பாஜக+ 115

காங்கிரஸ்+ 83

மற்றவை+ 7

ஜார்க்கண்ட்:

மொத்த தொகுதிகள் - 81

பெரும்பான்மைக்கு - 41

பாஜக+ 39

ஜெஎம்எம்+ 37

மற்றவை: 1

கேரளா: வயநாடு இடைத் தேர்தல்- காங்கிரஸ் முன்னிலை

காங்கிரஸ் - 68,917

சிபிஐ - 20,678

பாஜக - 11,235

மற்றவை - 121

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT