முகப்பு
தற்போதைய செய்திகள்

நிதீஷ் குமார்-ரிங்கு சிங் அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 222 ரன்கள் இலக்கு!

வங்கதேசத்துக்கு ரன்கள் 222 இலக்கு நிர்ணயித்தது இந்தியா.

Updated On : 9 அக்டோபர் 2024, 8:38 pm IST
பகிர்:

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி தில்லியில் நடைபெற்று வருகிறது.

டாஸ்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாண்டோ முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்தியா பேட்டிங்

அதன்படி இந்தியாவில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகளை தெறிக்கவிட்டார்.

டெஸ்டில் அதிக 150* ரன்கள்: ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்!

முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 2-வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து 10 ரன்னில் வெளியேறினார். அவருடன் வந்த அபிஷேக் சர்மாவும் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் பெவிலியன் திரும்ப இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

நிதீஷ் குமார் மிரட்டல்

கடந்த போட்டியில் அறிமுக வீரரான நிதீஷ் குமாரும், ரிங்கு சிங்கும் இணைந்து அதிரடியில் மிரட்டினர்.இவர்களின் அதிரடியால் 10 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்தது.

தனது இரண்டாவது போட்டியிலேயே 27 பந்துகளில் அரைசதம் விளாசினார் நிதீஷ் குமார் ரெட்டி. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதீஷ் குமார் 7 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் பெவிலியன் திரும்பினார்.

அவருக்குப் பின்னர் வந்த ஹார்திக் பாண்டியாவும் அதிரடியில் மிரட்டினார். தனது மூன்றாவது அரைசதத்தை நிறைவு செய்த ரிங்கு சிங் 3 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ரியான் பராக் 2 சிக்ஸர்களுடன் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஹார்திக் பாண்டியா 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் கோல்டன் டக் அவுட்டாக, வரு சக்ரவர்த்தியும் டக் அவுட்டானார். அர்ஷ்தீப் சிங் ஒரு சிக்ஸருடன் 6 ரன்னில் வெளியேறினார்.

டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசை: 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஹார்திக் பாண்டியா!

வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தஸ்கின் அகமது, தன்சீம் அசன், முஸ்தபிசுர் ரகுமான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ்

வங்கதேசத்துக்கு ரன்கள் இலக்கு

இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. வங்கதேச அணிக்கு 222 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் ஹாரி புரூக்.. 6 இன்னிங்ஸில் 4 சதங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.