மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 5,317 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,938 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 5,317 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,938 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை (அக்.11) காலை முதல் வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 800 கன அடியில் இருந்து வினாடிக்கு 700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?: காவல்துறை விசாரணை
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 5,317 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,938 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 90.28 அடியில் இருந்து 89.67 அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 52.27 டிஎம்சியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.