முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓடிடியில் வெளியானது டிமாண்டி காலனி - 2!

டிமாண்டி காலனி - 2 திரைப்படம் ஓடிடி வெளியீடு குறித்து...

Updated On : 27 செப்டம்பர் 2024, 7:31 pm IST
டிமாண்டி காலனி - 2 போஸ்டர். - படம்: எக்ஸ்
பகிர்:

அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி - 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமாண்டி காலனி 2 திரைப்படம், கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்தில் அருண் பாண்டியன், முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், டிமாண்டி காலனி படத்தின் 2-ம் பாகம், ஜீ5 ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments