FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் கூட்டம் முடியும் வரை காத்திருந்த மக்கள்: எதற்காக?

தமிழக முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள், கூட்டம் முடிந்த உடன் வாழைக்குலை மற்றும் கரும்புகளை வெட்டி எடுத்து சென்றனர்.

Updated On : 7 பிப்ரவரி 2025, 1:36 pm IST
முதல்வர் கூட்டம் முடிந்தவுடன் அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள் அங்கிருந்த வாழைக்குலை மற்றும் கரும்புகளை வெட்டி எடுத்து சென்றனர்.
பகிர்:

தமிழக முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள், கூட்டம் முடிந்த உடன் வாழைக்குலை மற்றும் கரும்புகளை வெட்டி எடுத்து சென்றனர். வாழைக்குலைகள், கரும்புகளை உடைத்து தலையில் சுமந்து கொண்டு அங்கும் இங்கும் ஓடிய காட்சி வேடிக்கையாக இருந்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு வந்திருந்தார். வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு நலத்திட்ட வழங்கும் விழா மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் வருகைக்காக அந்த பகுதி முழுவதும் கரும்புகள் மற்றும் வாழைக்குலைகளைக் கொண்டு செய்யப்பட்டிருந்தசிறப்பு அலங்காரம்.

இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

Advertisement

Advertisement

முதல்வர் வருகைக்காக அந்த பகுதி முழுவதும் கரும்புகள் மற்றும் வாழைக்குலைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான வாழைக்குலைகளும் கரும்புகளும் அடுக்கி வைக்கப்பட்டு காட்சிப் பொருளாக இருந்தது.

வாழைக்குலைகள், கரும்புகளை உடைத்து தலையில் சுமந்து செல்லும் மக்கள்.

இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் ஒரு மணி நேரத்தில் முடிந்து முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து அந்த கட்டப்பட்டிருந்த தோரணங்களாக கட்டப்பட்டிருந்த வாழைக்குலைகளையும் கரும்புகளையும் வெட்டி எடுத்துச் செல்வதற்காக அரிவாளுடன் காத்திருந்த மக்கள் கூட்டம், கூட்டம் முடிந்த ஒரு சில நிமிடங்களிலேயே களத்தில் இறங்கினர்.

தோரணங்களாக கட்டப்பட்டிருந்த வாழைக்குலைகளை வெட்டி எடுத்தும் கரும்புகளை உடைத்துக் கொண்டு தலையில் சுமந்து கொண்டும் தங்களது உயிர்களையும் பொருட்படுத்தாமல் அங்கும் இங்கும் ஓடிய காட்சி காண்போரை வேதனைக்குள்ளாக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments