FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை: மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்: கர்நாடக முதல்வர்

மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் வரவிருக்கும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் தெரிவித்தது குறித்து...

26 வினாடிகள் முன்பு
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப் படம்
பகிர்:

மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் வரவிருக்கும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் செவ்வாய்க்கிழமை (செப். 15) தெரிவித்தார்.

முன்னதாக, எதிர்க்கட்சியைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் வறட்சிப் பகுதிகளில் எங்கள் தொகுதிகளை சேர்ந்த வட்டங்களையும் சேர்க்க வேண்டும் எனப் போராடினர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் டி.கே. சிவகுமார் பேசியதாவது:

Advertisement

Advertisement

மழைப்பொழிவு குறைந்துகொண்டே வருகிறது. இதற்காக, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கவலையடைய வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் ஆதாயங்களுக்காக போராடுவதில் எந்தப் பயனும் இல்லை. இந்தப் பிரச்னைகளை சரிசெய்வதில் உங்களைவிட அரசுக்கு அதிக அக்கறை உண்டு. சில எதிர்க்கட்சிகள் இந்த சூழலை அர்சியலாக்க முயற்சிக்கிறார்கள்.

வறட்சி தொடர்பாக சில பகுதிகள் குறித்த அறிக்கைகள் வெளிவந்துள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், சில பகுதிகளில் மட்டுமே குறைந்த அளவு மழை பெய்தது; அதுவும் எதிர்பார்த்த அளவு இல்லை. மின்சாரப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, மக்கள் மனதளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும். குடிநீர் விநியோகத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நோக்கத்துக்காகவும், விவசாயிகளின் பிரச்னைகளை விவாதிப்பதற்காகவும் மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த வாரம் மங்களூரில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுடனான கலந்துரையாடல்கள் நிறைவடைந்த பிறகு, மேலும் அறிவிப்புகள் வெளியாகும் என டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

முதல் கட்டமாக, மாநில அரசால் ஏற்கெனவே 101 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன; மேலும் பல வட்டங்கள் இவ்வாறு அறிவிக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar stated on Tuesday (Sept. 15) that the public should be mentally prepared for the impending water shortage issue caused by the prevailing drought conditions in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments