FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணின் கருவிலுள்ள குழந்தைக்குள் வளர்ந்த கரு!

மகாராஷ்டிரத்தில் ஒரு பெண்ணிற்கு அரிய வகையான கரு உண்டாகியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 29 ஜனவரி 2025, 12:49 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஓர் கர்ப்பிணிப் பெண்ணிற்கு அரிய வகையான ‘கருவினுள் கரு’ எனும் நிலை உண்டாகியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புல்தானா மாவட்டத்தின் பெண்கள் மருத்துவமனையில் 35 வாரங்கள் கர்ப்பிணியான 32 வயதுடைய பெண்ணிற்கு சோனாகிராபி சோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு கருவினுள் கரு (ஃபீடஸ் இன் ஃபீட்டூ) எனும் அரிய வகையான நிலை உருவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, ஓர் பெண்ணின் வயிற்றுக்குள் உண்டாகியுள்ள குழந்தையின் உடலினுள் மற்றொரு முழு வளர்ச்சியடையாத குறைபாடுடைய கரு உருவாகியிருக்கும் நிலைதான் இது எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால் கூறியதாவது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையானது 5 லட்சத்தில் ஒருத்தருக்கு மட்டும் நிகழக்கூடிய அரிய வகையான மருத்துவ நிலை என்றும், இது வரை உலகளவில் வெறும் 200 பேருக்கு மட்டுமே இந்த நிலை உண்டாகியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி

பெரும்பாலும், குழந்தை பிறந்த பின்னரே கண்டறியப்படும் இந்த நிலை இந்த பெண்ணிற்கு பிரசவத்திற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது வரை 10 முதல் 15 பேருக்கு மட்டுமே இந்த வகையான கர்ப்பம் உண்டாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, 8 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணின் கருவில் உண்டாகியுள்ள குழந்தையின் வயிற்றுப் பகுதியில் ’கரு’ போன்ற உருவம் சோனோகிராப்பி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு கதிரியக்க நிபுணரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த பெண் பாதுகாப்பான பிரசவத்திற்காக சத்திரப்பதி சம்பாஜி நகர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments