ரூ.90,000க்கு விற்கப்பட்ட பெண் குழந்தை! போராடி மீட்ட பாட்டி!
மகாராஷ்டிரத்தில் விற்பனை செய்யப்பட்ட பேத்தி பாட்டியால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதைப் பற்றி...
மகாராஷ்டிர மாநில தாணேவில் பெற்றோரால் விற்கப்பட்ட பெண் குழந்தையை காவல் துறையினரின் உதவியோடு குழந்தையின் பாட்டி பத்திரமாக மீட்டுள்ளார்.
தாணேவின் உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவருக்கு கடந்த ஜன.22 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையறிந்த, அவரது தாயார் தனது பேத்தியைக் காண மருத்துவமனைக்கு வந்தபோது அங்கு அந்த கைக்குழந்தையை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதப்பற்றி அந்த பெண் தனது மகனிடம் கேட்டுள்ளார். அப்போது, அவர் அந்த 6 நாளே ஆன அந்த பச்சிளம் குழந்தையை ரூ.90,000க்கு வேறொரு தம்பதிக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் பணத்தை திருப்பி கொடுத்து குழந்தையை மீட்டு வருமாறு தனது மகன் மற்றும் மருமகளிடம் தொடர்ந்து கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பச்சிளம் குழந்தையை வாங்கியவர்கள் யாரென்று தெரியாததினால், வேறு வழியின்றி தனது பேத்தியை மீட்டு தருமாறு அந்த பெண் உல்ஹாஸ்நகர் மத்திய காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஹிமாசலில் 2 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!
அந்த புகாரின் அடிப்படையில் குழந்தையின் பெற்றோர், குழந்தையை வாங்கிய தம்பதி மற்றும் அவர்களுக்கு தரகராக செயல்பட்ட பெண் ஆகியோரின் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தையை வாங்கிய தம்பதியிடம் இதற்கு முன்னர் அவர்கள் வேறுயாரிடமாவது குழந்தையை வாங்கியுள்ளனரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, தனது மகன் மற்றும் மருமகளை எதிர்த்து போராடி காவல் துறையினரின் உதவியோடு தனது பேத்தியை மீட்ட பாட்டியின் அன்பும் துணிவும் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.