FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

Updated On : 12 ஜூன் 2025, 9:11 am IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக உயர்ந்துள்ளது.
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது. அதன் பிறகு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும், தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே குறையாமல் இருந்து வருகிறது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக புதன்கிழமை காலை அணைக்கு வினாடிக்கு 5,146 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,339 கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 114.62 அடியிலிருந்து 114.91 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 85.58 டிஎம்சியாக உள்ளது.

நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கும் மேல் நீடிப்பதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறித்த நாளான வியாழக்கிழமை(ஜூன் 12) தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments