மேட்டூர் அணை நீர்மட்டம்: இன்றைய நிலவரம்!
மேட்டூர் அணை நீர்மட்ட இன்றைய நிலவரம் பற்றி...
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.21 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 நாள்களில் 4.19 அடி உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வந்த மழை தணிந்து வருவதால் கபினிக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை காலை (ஆக. 7) மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,264 கனஅடியில் இருந்து வினாடிக்கு 18,875 கனஅடியாக சரிந்துள்ளது.
Advertisement
Advertisement
வியாழக்கிழமை மாலை 76.18 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 77.21 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 39.23 டிஎம்சியாக உள்ளது.
கடந்த மூன்று நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4.19 அடி உயர்ந்துள்ளது.
Regarding the current water level status of Mettur Dam...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.