FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அழகே அழகு

முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து முகம் பளிச்சிட வேண்டுமா?

முகத்தில் பரு வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம் பொலிவிழந்து காணப்படும்.

Updated On : 15 ஜூன் 2018, 11:17 am IST
பகிர்:

முகத்தில் பரு வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம் பொலிவிழந்து காணப்படும். அதற்கு ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக் கொண்டு அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

சிலருக்கு முகத்தில், மூக்கில், கன்னங்கள் என கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராமப்புறத்தில் 'மங்கு' என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரில் கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த சாந்தை முகத்தில் உள்ள கருப்பு திட்டுகள் மீது தடவுங்கள். வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கருந்திட்டு மறைந்துவிடும்; முகமும் பொலிவு பெறும். 

பாதாம் பருப்பை ஊறவைத்து பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து விழுது போன்று ஆக்கி, இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி வர முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து முகம் பளிச்சிடும். 

Advertisement

Advertisement

கடலை மாவு, பாசி பயறு இரண்டையும் அரைத்து வைத்து கொண்டு தினமும் காலையில் குளிக்கப் போகும் முன் ஒரு கைப்பிடி மாவை எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி, அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்துவிடுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இது போன்று செய்து வந்தாலே முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்து முகம் பளபளப்பாவதை உங்களால் உணரமுடியும். 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல இயற்கை க்ளென்சராகும் (CLEANSER). குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின் முகத்தை கழுவி விட . இது ஒரு சிறந்த கிளென்சிங் ஆகும்.

இளநீரும் ஒரு மிகச்சிறந்த கிளென்சிங் பொருள். எனவே தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவி வர முகம் பளிச்சிடும். 

இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூன் பயிற்ற மாவைக் கலந்து முகப்பரு தழும்புகளின் மீது பூசிவர முகப்பரு தழும்புகள் நீங்கி முகம் பளிச்சிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments