முகப்பு
செய்திகள்

மாதுளம் பழம் தெரியும்! மாதுளம் பூவின் நன்மைகள் தெரியுமா?

மாதுளம் பழத்தைப் போன்றே மாதுளம் பூவிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. மாதுளம் பழத்தைப் போலவே, மாதுளம்பூவிலும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன. 

Updated On : 6 ஜனவரி 2022, 4:33 pm IST
பகிர்:

மாதுளம் பழத்தைப் போன்றே மாதுளம் பூவிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. மாதுளையின் பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.

மாதுளம் பழத்தைப் போலவே, மாதுளம்பூவிலும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன. 

மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்த விருத்தி அடையும். ரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். 

Advertisement

Advertisement

மாதுளம் பூக்களை உலர்த்திய பின்னர் பொடியாக்கி நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரு நாள்களில் இருமல் குறையும். 

மாதுளம் பூவை பாலில் ஊறவைத்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

அருகம்புல் சாறுடன் மாதுளம் பூ சாறு சேர்த்து சாப்பிட்டால் இருமல் சரியாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் சரியாகும். 

பெண்களுக்கு கருப்பை வலுவடைய மாதுளம் பூ சாறு சாப்பிடலாம். 

மாதுளம்பூவை நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிது தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டைப்புண், வயிற்றுப்புண் உள்ளிட்டவை சரியாகும். 

மாதுளம் பூவை தலையில் வைத்துக்கொண்டால் தலைவலி தீரும். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் உடலை குளிர்ச்சி அடையச் செய்ய மாதுளம்பூவை அப்படியே சாப்பிட்டு வரலாம்.

இதையும் படிக்க | மாதுளையின் பயன்கள்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments