பெண்கள், 35 வயது முதலே உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்! பிட்னெஸ் குறித்து அபிராமி
பிட்னெஸ், பெண்களின் ஆரோக்கியம் குறித்து நடிகை அபிராமி கருத்து...
42 வயதில் தன்னுடைய பிட்னெஸ் ரகசியம் குறித்தும் உடல் எடையைக் குறைத்தது பற்றியும் நடிகை அபிராமி பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பெண்கள் தங்களது 35 வயது முதலே உடல்நலத்தில் கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மிடில்கிளாஸ் மாதவன், விருமாண்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை அபிராமி சமீபமாக லெவன், மகாராஜா, தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகையாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார். நடிகர் அர்ஜூனுடன் அபிராமி நடித்துள்ள 'பிளாஸ்ட்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் அதில் அவர் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார். இதற்கு சில எதிர்மறை விமர்சனங்களும் வந்தன.
Advertisement
Advertisement
இந்நிலையில் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் 42 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது பற்றியும் அபிராமி தனது இன்ஸ்டாகிராம் மூலமாக பதிலளித்துள்ளார்.
"நான் என்ன செய்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் வருவது இயல்புதான். அனைவரையும் நாம் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது"
இளம் வயதில் நாம் நம் உடலை கவனித்துக்கொள்வது வயதான காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். பெண்கள் 40 வயதை கடக்கும்போது உடலில் கால்சியம் இழப்பு ஏற்படும். அப்போது தசை வலிமை குறையும். மெனோபாஸ்க்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டத்திலும் தசையின் வலிமை குறையும். அதனால் 35 வயது முதலே பெண்கள் தங்களுடைய உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது முதலே உடல்நலத்தில் கவனம் செலுத்தினால் பின்னாளில் ஆரோக்கியமாக வாழ முடியும். நான் என்னுடைய பிட்னெஸ், வலிமை, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உடல் எடையைக் குறைத்தேன். முழுக்க முழுக்க உணவு மற்றும் ஜிம் பயிற்சிகள் மூலமாகவே பிட்னெஸ்ஸாக இருக்கிறேன்" என்று கூறினார்.
பெண்கள் பலரும் பொதுவெளியில் விவாதிக்க மறுக்கும் விஷயம் குறித்து அபிராமி பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
Blast actress Abhirami explains the reason behind her weight loss and opinion about womens health
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.