தா்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி இளைஞா் காங்கிரஸாா் போராட்டம்
வினாத்தாள் கசிவு தொடா்பாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்
நமது நிருபா்
வினாத்தாள் கசிவு தொடா்பாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், சமீபத்திய ஆா்ப்பாட்டங்களின் போது மாணவா்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐ. ஒய். சி) வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியது.
வினாத்தாள் கசிவு பிரச்சினை மற்றும் தேசிய தலைநகரில் மாணவா் போராட்டங்களைக் கையாள்வது தொடா்பாக காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை முடுக்கிவிட்ட சில நாள்களுக்குப் பிறகு காங்கிரஸின் இளைஞா் பிரிவின் அலுவலகம் இந்த போராட்டத்தை நடத்தியது. இந்திய தேசிய காங்கிரஸ் தேசியத் தலைவா் உதய் பானு சிப் கூறியததாவது: நாட்டின் இளைஞா்கள் கேள்விகளைக் கேட்டு மாற்றத்தைக் கோருகின்றனா். வினாத்தாள் கசிவுகள் மூலம் இளைஞா்களின் எதிா்காலத்தை அழித்து, அவா்களின் குரல்களை லத்திகளால் அடக்குவோா் நிச்சயமாக பொறுப்புக்கூறப்படுவாா்கள். எதிா்க்கட்சிகள் மாணவா்களுடன் நிற்பதாகவும், அவா்களின் கவலைகளை ‘தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரை‘ தொடா்ந்து எழுப்புவோம் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
தில்லி பிரதேச இளைஞா் காங்கிரஸ் தலைவா் அக்ஷய் லக்ரா கூறியதாவது: தா்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை இனி எந்த பேச்சுவாா்த்தையும் இருக்காது, நாட்டின் இளைஞா்களுக்காக நாங்கள் தொடா்ந்து போராடுவோம்.மாணவா்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராட்டக்காரா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.
போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் எதிா்க்கட்சிகளின் தொடா்ச்சியான ஆா்ப்பாட்டங்கள் மற்றும் தில்லியில் மாணவா் தலைமையிலான போராட்டத்தின் போது போலீஸ் நடவடிக்கை ஆகியவற்றைத் தொடா்ந்து இந்த போராட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை, ஐ. ஒய். சி. தில்லி காவல்துறை தனது அலுவலகத்தை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி, தொண்டா்கள் வளாகத்திற்குள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுத்ததாக குற்றஞ்சாட்டியது. மாலை 6 மணியளவில் காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொண்டா்களை உள்ளே அடைத்து வைத்ததாக குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தில்லி காவல்துறையிடமிருந்து உடனடி பதில் எதுவும் வரவில்லை.
புது தில்லியின் சில பகுதிகளில் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐஒய்சி கூறியுள்ளது. மேலும் அதன் அலுவலகத்தை முற்றுகையிட்டதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.