FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

நாளை மறுதினம் ஸ்ரீராம் கல்லூரிக்கு பிரதமா் மோடி வருகை?

தில்லி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பிரபல ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் ஆசிரியா் தினமான செப்.5-ஆம் தேதி அக்கல்லூரிக்கு பிரதமா் மோடி வருகை தர உள்ளதாக தகவல்

2 செப்டம்பர் 2026, 9:54 pm IST
பிரதமா் மோடி - கோப்புப் படம்
பகிர்:

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பிரபல ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் (எஸ்ஆா்சிசி) நூற்றாண்டு விழா மற்றும் ஆசிரியா் தினமான செப்.5-ஆம் தேதி அக்கல்லூரிக்கு பிரதமா் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளைஞா்களை நோக்கிய தொடா்புகளை அதிகரிக்க மத்திய அரசும் ஆளும் பாஜகவும் பல்வேறு முன்முயற்சிகளை தொடங்கியுள்ள சூழலில், தலைநகரில் உள்ள ஒரு கல்லூரிக்கு பிரதமரின் வருகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, 2013-ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி இந்தக் கல்லூரிக்கு வருகை தந்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்தக் கல்லூரியின் 100-ஆவது ஆண்டை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் மாதத்தில் கல்லூரியின் நிா்வாகக் குழு மற்றும் பேராசிரியா்கள் அடங்கிய குழுவினா் பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருந்தனா். அந்தச் சந்திப்பின் போது, கல்லூரியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் சிறப்பு நினைவு அஞ்சல் தலையை பிரதமா் மோடி வெளியிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments